×

கோபி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை

 

கோபி,டிச.1:கோபி நகராட்சியில் பணியாற்றி வரும் 119 தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் சார்பில் நல வாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோபி வடக்கு பூங்காவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈரோடு தாட்கோ மேலாளர் அர்ஜூன் கலந்து கொண்டு 119 தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியத்தினால் கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கினார். அடையாள அட்டைகளை கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

அதைத்தொடர்ந்து வீடு மற்றும் நிலம் இல்லாத தள்காலிக தூய்மை பணியாளர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலமாக அளுக்குளியில் கட்டப்பட்டு உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் பயனாளிகளிடம் 10 சதவீத பங்களிப்பு தொகையை மட்டும் பெற்றுக்கொண்டும், மீதமுள்ள தொகையை தாட்கோ மூலமாக வழங்கி வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி தலைவர் நாகராஜ் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தாட்கோ நிறுவன இளநிலை உதவியாளர் மணிகண்டன், கோபி நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கோபி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை appeared first on Dinakaran.

Tags : Gobi Municipality ,Gobi ,Tamil Nadu ,
× RELATED கோபி அருகே ஒத்தக்குதிரையில்...